இலக்கியம் பேசி
மகிழவோ!
ஆசிரியர் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன்
” நவில்தொறும் நூல் நயம் போலும்”
” பயனுள்ள நல்ல சொற்களையே சொல்லுக;
பயனில்லா வீண் சொற்களைச் சொல்லற்க.”
“சுயநலம் என்பது ஒரு சிறு உலகம்; அதில்
ஒரே ஒரு மனிதன் மட்டும் வசிக்கிறான்.”
“துருப்பிடித்துப் போவதை விடத் தேய்வதே நல்லது.”
“சத்தியத்தைக் கூறச் சக்தி பெறுவதே சமத்துவத்தின் சாரல்.”
“புனிதமான செயல்களில் வாழ்வதே புகழ் எனப்படும்.”
“சந்தேகிப்பவனுடைய அதிருப்தி சந்தேகத்தை விடக் கொடுமையானது.”
“நான் இந்நாட்டை எனது அன்னையைப் போலக் கருதி வழிபடுகிறேன்”
“அருஞ் செயல்களைப் பெருந்தியாகத்தால் மட்டுமே செய்திட முடியும்.”
“அயலார் அறியாமல் அறநெறி நின்றவனே நன்கு வாழ்ந்த அறவோன்.”
“நீ யாரைப் புகழ்கின்றாய் என்று சொல்; உன் இயல்பை நான் சொல்லி விடுகிறேன்.”
“இசையால் எழுப்ப முடியாத ஆசைகளும் இல்லை;அவிக்க முடியாத ஆசைகளும் இல்லை.”
“இசையே உலகின் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவான மொழி.”
“தன்னை வெல்வதே அறத்தின் வேர்.”
“என்னிடம் மூன்று செல்வங்கள் உள்ளன:
அன்பு, அடக்கம், மெய்யுணர்வு.”
“கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்குப் பல வீடு.”
“தனிமரம் தோப்பு ஆகாது; ஆனால் அது தோப்பு ஆவதற்கு உதவும்.”
“ஆயிரம் பிறைகண்டு சிறந்தோரை வாழ்த்துதல்
ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகிய நான்கும் தரும்.”
“இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை துன்பங்கள் தனித்து வருவதில்லை.”
6558total visits,8visits today