திரு.வி.கே கல்யாண சுந்தரம் அவர்களின் மகளான .கமலா தேவி அவர்களை திருமணம் செய்தார். அவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் உண்டு.

      1. மக்கள்:
        • திருமதி. கவிதா – கணவர் திரு .ரெங்கநாதன்
          • பேரன் : கல்யாண விசாகன்
        • டாக்டர் அனுராதா, டாக்டர் கணேசன்
          • பேத்தி : அமிர்தவர்ஷினி
          • பேரன் : சண்முக சுந்தரம்
        • திரு கார்த்திகேயன் – திருமதி. அபிராமி
          • பேத்தி : சௌந்தர்ய மீனாட்சி
          • பேரன் : குமரன்
        • திரு கல்யாண ராஜன் – திருமதி யோகலக்ஷ்மி
          • பேத்தி -கமலதாரணி
      2. புகழுக்கு உரிய நான்கு சம்பந்திகள்.
        • திரு.வீ.கி.கல்யாண சுந்தரம் கே.எம்.என் அவர்கள் இவருடைய மாமனாரும், சம்பந்தியும் ஆவார்.                                                                                                                                                                                                        

          ‘வெற்றிச் செல்வர்’ வி.கே.கல்யாண சுந்தரம் அவர்கள் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவாரூரில் பிறந்து மலேசியாவில் புகழ்ஈட்டி (கெசாத்திரியா மங்கு நெகரா)  கே.எம்.என். எனும் உயரிய விருது பெற்றவர்.  விருதுமட்டும் மூன்றெழுத்தல்ல அவர் விலாசமும் மூன்றெழுத்து வீ.கே.கே. இந்தச் சொல் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாடு என பெருவணிகர்கள் அறிந்து வணங்கும் மந்திரச் சொல் ஆனது.

          வணிக வாழ்வைத் தலைமேல் கொண்டு பெருமை பெற்ற ஆயிர வைசிய மரபில் பிறந்து, ஆயிர வைசிய ஆலமரத்தின் விழுமிய விழுதாக உயர்ந்து நின்றார்.  தன்னம்பிக்கை, துணிவு, உழைப்பு இவரின் முன்றெழுத்துத் தாரக மந்திரம்.

          தொட்டது துலங்கச் செய்து, வீ.கே.கே என்ற மூன்று விலாசத்தை, உழைப்பு, உறுதி, நிதானம் என முப்பரிமானப் பார்வைகளால், மூன்று நாடுகளையும் இணைத்து தமிழ்நாடு, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உட்படப் பெரு வணிகச் செம்மலாக வெற்றிச் செல்வர் எனப் பெயர் பெற்றவர்.

                                                                                                     

        • டாக்டர் சண்முகசுந்தரம் அவர்கள் சேலம் விநாயகா மிஷன் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர். மூன்று மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட 30 கல்வி நிறுவனங்கள் நடத்துபவர். கொடைஞர், பல கோயில் பணிகள், அறப்பணிகள் ஆற்றுபவர்
        • திரு. டி.ஆர்.ஜி குணசேகரன் பி.ஏ, அவர்கள் வெள்ளக்கோயில் புகழ் பெற்ற தொழிலதிபர். நகரத் தந்தை என போற்றப்பட்ட திரு. டி.ஆர் கணபதி செட்டியார் அவர்களின் மகன். இளகிய மனம் படைத்த புரவலர்.
        • மறைந்த, திரு. சந்திரன் செட்டியார் சென்னையில் சமூகத்தில் புகழ் பெற்ற P.R.நள சக்கரவர்த்தி. நல்ல மனமும் பாசமும் கொண்ட நிலக்கிழார்.

5598total visits,1visits today